இவர் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதி சிட்டகாங்கில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 23.
கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம், சம்பியன்ஸ் டிராபி ஆகிய முக்கிய கிண்ணங்களை கைப்பற்றி சாதனை அணித்தலைவராக இருக்கிறார்.
மேலும், 59 டெஸ்ட் போட்டிகளுக்கு அணித்தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் சிறந்த அணித்தலைவராக இருப்பதால் டோனியின் மீது ரசிகர்கள் தனி பாசம் வைத்துள்ளனர்.
டோனி இதுவரை 89 டெஸ்ட், 250 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 13,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார். விக்கெட் கீப்பராக 500 பிடியெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
இப்படிப்பட்ட சாதனை வீரரான டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment