ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடித்த ‘ஐ’ படம் சில தினங்களுக்கு முன் தணிக்கை செய்யப்பட்டது. படத்திற்கு யுஏ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. யுஏ சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசிடமிருந்து வரிச்சலுகை கிடைக்காது. எனவே, யு சர்டிஃபிகேட் வழங்கும்படி தணிக்கை அதிகாரியை வற்புறுத்தி உள்ளனர்.
'ஐ' படத்தில் குழந்தைகள் பார்க்க லாயக்கில்லாத வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகம் இருப்பதால் யு சர்டிஃபிகேட் வழங்க முடியாது என்றும், அதனால்தான் யுஏ சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டதாகவும் சென்சார் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். எனவே, எப்படியாவது யு சர்டிஃபிகேட் வாங்கியே தீர வேண்டும் என்று தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல தயாரிப்பாளர் தரப்பில் முயற்சிஎடுக்கப்பட்டு வருகிறது.
கேளிக்கை வரி என்பது படம் பார்க்கவரும் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம். யு சான்றிதழ் பெற்ற படங்களை பார்க்கும் மக்களுக்கு வரிசலுகை அளிக்கப்படும். வரி செலுத்த வேண்டிய தெகையை நீக்கிவிட்டு திரைப்படத்திற்கான கட்டணத்தை மட்டும் தான் திரையரங்குகள் வசூல் செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் எந்த திரையரங்காவது முறையாக கட்டணம் வசூலிக்கின்றனவா என்றால் தேடி தான் கண்டுபிடிக்கவேண்டும். ஒரு திரையரங்காவது சரியான கட்டணம் வசூலித்தாலே அதிசயம் தான்.
‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரிகிடைக்க வேண்டும் என ஆஸ்கார் பாடுபடுவது மக்கள் நலனுக்காக அல்ல. யு சான்றிதழ் கிடைத்தால்தான் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய கேளிக்கை வரியை விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பங்குபோட்டுக்கொள்ள முடியும், பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடியும். அப்படி இல்லையெனில் ஐ படத்தை அடிமாட்டு விலைக்கு தான் வாங்குவார்கள் விநியோகஸ்தர்கள். அதற்கு தான் ஆஸ்கார் சென்சார் அதிகாரிகளுடன் முட்டிமோதிக்கொண்டிருகின்றார்.
ஐ படத்துக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுள்ள அதே நேரம், பட்ட காலிலேயே படும் என்பதுபோல் இன்னொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக ஐ படக்குழுவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஐ படத்தை உலகம் முழுக்க 20 ஆயிரம் தியட்டர்களில் வெளியிடப்போவதாகவும், சீனாவில் மட்டும் 15 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போவதாகவும் அடுக்கடுக்கான புரளிகளை அவிழ்த்து விட்டது ஐ படக்குழு. உண்மையில் உலகம் முழுக்க ஆயிரம் தியேட்டர்களில் ஐ படம் ரிலீஸ் ஆனாலே பெரிய விஷயம் என்பதே தற்போதைய நிலவரம். அதிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி சங்கராந்தி போன்ற முக்கிய பண்டிகையின்போது டப்பிங் படங்களை ரிலீஸ் செய்ய ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனுமதி கிடையாது. இந்த விதியை காரணம் காட்டி சங்கராந்தி அன்று நேரடி தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்கள் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங்கை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. இதனால் ‘ஐ’ படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆஸ்கார் ரவிசந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தெலுங்கில் வெளியிட தடை விதிக்கப்பட்டால், தமிழில் மட்டும் ஐ படத்தை வெளியிடுவது தற்கொலைக்கு சமம். காரணம்… ஒருவேளை ஐ படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலோ, நெகட்டிவ்வாக இருந்தாலோ ஐ படத்தின் தெலுங்கு டப்பிங்கை வாங்கியவர் அங்கே படத்தை வெளியிட முன் வரமாட்டார். அப்படி நடந்தால் மேலும் பல கோடி நஷ்டம் வரும்.
0 comments:
Post a Comment