கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி உலகையே உலுக்கிய சுனாமியின் கோர தாண்டம் இன்னும் பலர் மனதில் ஓயாத அலைகளாய் தான் உள்ளன. குறிப்பாக இதன் தாக்கம் இந்தோனேஷாவில் சற்று அதிகமாகவே இருந்தது.
இதில் சுமத்ரா தீவினை சேர்ந்த ஜமாலியா(Jamaliah) என்ற பெண்ணும் சுனாமி அலைகளால் தன் 3 குழந்தைகளுடன் அடித்து இழுத்து செல்லப்பட்டார்.
அலைகள் ஓய்ந்த பின் அவர் தன் ஜன்னாவையும்(Jannah Age-4),மகன் ஆரிப்பையும்(Arif Age-7) இழந்தது தெரியவந்தது.
இதன்பின் பல இடங்களில் தேடியும் அவரது குழந்தைகள் கிடைக்கவில்லை என்ற போதும், தன் குழந்தைகள் என்றேனும் ஒருநாள் கிடைப்பர் என குடும்பத்தினரும் கண்ணீர் மல்க ஜமாலியா கூறி வந்துள்ளார்.
இவரது கனவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தோன்றிய இவர் அண்ணன் சைனுதீன்(Zainuddin) தன் கனவில் மூன்று நாட்களாக ஒரு பெண் வருவதாக கூறியுள்ளார்.
அடுத்த நாளே தன் கனவில் வந்த பெண்ணை ஒரு தேநீர் விடுதிக்கு அருகே ஜமாலியாவின் சகோதரர் சந்தித்தார்.
அந்த கடையின் உரிமையாளர் அந்தப் பெண் சுனாமியால் பெற்றோரை இழந்த அனாதை என்றதும், அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து தன் தங்கையிடம் காட்டியுள்ளார்.
பத்து வருடங்கள் ஆன போதும் ஜமாலியா அது தனது மகள் தான் என்று தீர்மானமாக தெரிவித்துள்ளார்.
உடனே இருவரும் ஜன்னாவை சந்தித்தனர். ஜமாலியாவின் வீட்டிலிருந்து தொலைவிலுள்ள பான் யாக் தீவில் ஜன்னாவைக் கண்டெடுத்த மீனவர் ஒருவர் தனக்கு தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்பின் தன் மகளோடு சேர்ந்த ஜமாலியா, சில தினங்களிலேயே தன் மகன் ஆரிப்பும் கிடைத்ததால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
0 comments:
Post a Comment