கியூரெரோ மாகாணத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி அயாட்ஜினப்பா என்ற இடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர் நன்கொடை திரட்ட இகுவாலா நகருக்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியதோடு, 43 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த விவகாரத்தில், உள்ளூரில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு இகுவாலா மேயரின் மனைவி துணை போனதாகவும், அதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பழிவாங்கும் விதத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து மேயர் ஜோஸ் லூயிஸ் அபர்கா, அவரது மனைவி மரியா டி லோஸ் ஏஞ்சல்ஸ் பினிடா, போதைப்பொருள் கடத்தல் கும்பலினர் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர்களில் பலரை நாங்கள் சுட்டுக்கொன்று, அடையாளம் தெரியாமல் போவதற்காக தீயிட்டுக் கொளுத்தினோம் என தெரிவித்தனர்.
தற்போது ஜேர்மனியை சேர்ந்த Heckler & Koch GmbH என்ற ஆயுத நிறுவனம் ஒன்று தான் அந்த கும்பலுக்கு ஆயுதம் வழங்கியதாக மெக்சிக்கோவில் உள்ள ஜேர்மனி தூதரகம் முன்பு பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு இதுதொடர்பாக விசாரிக்க தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டபோது, அலுவலகத்தில் உள்ள அனைவரும் கிறிஸ்துமஸ் விடுப்பில் சென்றுள்ளதாக ஊழியர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment