அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கடந்த வாரம், ஹரான் மோனிஸ்(Haron Monis) என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், ஹொட்டலின் உரிமையாளர் டோரி ஜான்சன் (Tory johnson) தீவிரவாதியின் கையில் இருந்து துப்பாக்கியை பிடிக்க முயன்றுள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக பலியாகியுள்ளார்.
இந்நிலையில் இவரது இறுதி சடங்கிற்கு ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இவரது தந்தை கூறுகையில், என் மகன் இறந்துவிட்டான் என்ற கவலை எனக்கு இருந்தாலும் அவன் நாட்டுக்காக இறந்தான் என மார்த்தட்டிக் கொள்வேன் என்றும் சிறிய வயதிலிருந்து அவனை வீரத்தோடு வளர்தேன் என்பதை அவன் நிரூபித்துவிட்டான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜான்சன் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவன் என்றும், அதனால் தான் தாக்குதலின் போது அவர் தன்னை பற்றி கவலைப்படவில்லை எனவும் அவரது உறவினர்கள் பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஜான்சனின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
0 comments:
Post a Comment