அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் லிங்காவுக்கு கூட்டம் குவியும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
நேற்று கப்பல், கயல், வெள்ளக்காரதுரை, மீகாமன் என நான்கு முக்கிய படங்கள் வெளியானதால் பல திரையரங்குகளில் லிங்கா தூக்கப்பட்டது. ஓடுகிற திரையரங்குகளிலும் ஒரு காட்சி இரண்டு காட்சி என காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.
வடபழனியில் உள்ள கமலாவில் மூன்று காட்சிகளும், எஸ்எஸ்ஆர் பங்கஜத்தில் நான்கு காட்சிகளுமாக லிங்கா தொடர்கிறது. அபிராமி மால், சங்கம், தேவி போன்ற முக்கிய திரையங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. சில திரையரங்குகளில் ஒன்று, சில திரையரங்குகளில் இரண்டு.
ரஜினியின் கடைசி இரு படங்களான கோச்சடையானும், லிங்காவும் விநியோகஸ்தர்களுக்கு திருப்திகரமாக அமையாததால் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ரஜினி அடுத்தப் படத்தை உடனே அறிவிப்பார் என தகவல் கசிந்துள்ளது.
என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment