தமிழ் சினிமாவின் ஹை ஸ்பீடு இயக்குனர் என்றால் ஹரி தான். எவ்வளவு பெரிய கதாநாயகர்கள் எத்தனை பெரிய நட்சத்திர கூட்டம் இருந்தாலும் தன் வேகத்தால் அனைவரையும் திறம்பட வேலை வாங்கி ஒரு படத்தை முடித்து கொடுப்பதில் வல்லவர்.
இதுவரை இவர் எடுத்த அத்தனை படங்களும் மினிமம் கேரண்டி தான். அதிலும் சாமி, சிங்கம், சிங்கம்-2, வேல், பூஜை, தாமிரபரணி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படங்கள்.
தமிழ் சினிமாவின் அடையாளமே கமர்ஷியல் தான். அந்த கமர்ஷியல் சினிமாவை எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில், குறிப்பாக குடும்பத்துடம் போய் பார்க்கும் படி எடுப்பார்.
இவர் படங்களில் நம் தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் ஓங்கியே நிற்கும். படத்தின் வில்லன்களை புரட்டி புரட்டி எடுக்கும் ஹீரோ, கறி சாப்பிட சொல்லும் போது ‘இல்ல சார் நாங்க பெருமாள் சாமி கும்புறவங்க, அதனால் சாப்பிட மாட்டோம்’ என்று மிகவும் யதார்த்தமான கமர்ஷியலை தருவதில் வல்லவர்.
எப்போதும் இவருக்கும் அந்த சாமியின் அருள் இருக்க தன் சிங்கமான பாய்ச்சலால் தமிழ் சினிமாவில் அத்தனை பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்டுகளையும் முறியடிக்க வேண்டும். ஹாப்பி பெர்த்துடே ஹரி சார்.
0 comments:
Post a Comment