இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டி பற்றி அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் பொண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்திய அணி ஒரு போட்டியில் வெல்லும் என்றால் அது மெல்போர்ன் மைதானத்தில் தான். மெல்போர்ன் மைதான ஆட்டக்களமும் இந்திய அணிக்கு பொருத்தமாக இருக்கும்.
எனவே இந்திய அணிக்கு இங்கு ஒரு வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால், அவுஸ்திரேலியா தாங்கள் வழக்கமாக ஆடும் விதத்தில் ஆடினால் மெல்போர்னிலும் 4 நாட்களில் ஆட்டம் முடிந்து விடும்.
டோனியின் தலைமையின் மீதும் இந்திய அணியின் அணுகுமுறை மீதும் ஏதேனும் விமர்சனம் இருக்குமேயானால், நான் அவர்களுக்குக் கூறுகிறேன்.
ஆக்ரோஷமான கிரிக்கெட்டிற்கான அறிகுறிகளை அவர் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் காண்பித்தார். களவியூகமும் ஆக்ரோஷமாகச் செய்தார். ஆனால் இவையெல்லாம் அவர்கள் வெற்றிக்கு சாதகமாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment