↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹீரோயின் அந்தஸ்தில் இருந்தாலும் இன்னொரு ஹீரோயின் படத்தில் ஒரு பாடலுக்கு  ஆட வேண்டுமென்றாலும் ஓகே ஒரேயொரு பின்னணி பாட்டு பாடி தரவேண்டுமென்றாலும் சொல்பவர் ஸ்ருதி ஹாசன். ‘தேவர்' இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடல் பாடியும் இருக்கிறார். இதுபற்றி கேட்டபோது ஸ்ருதி கூறியது:

தேவர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது குத்துப்பாட்டு ரகம் கிடையாது. அதை ஸ்பெஷல் பாடல் எனலாம். இதேபடத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறேன். இப்பாடலுக்கு சோனாக்ஷி சின்ஹா நடனம் ஆடி இருப்பது பற்றி கேட்கிறார்கள். நான் 6 வயது முதல் பாடி வருகிறேன். நான் பாடிய பாடலுக்கு நானே ஆடுகிறேனா அல்லது வேறு யாராவது ஆடுகிறார்களா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. இப்படத்தில் முதலில் என்னை பாடல் பாடத்தான் அழைத்தார்கள். அதன்பிறகுதான் மற்றொரு பாடலுக்கு நடனம் ஆடக் கேட்டார்கள்.

 கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எந்த திரையுலகமாக இருந்தாலும் அதை பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் பார்க்கிறேன். இதில் வேறுபாடு என்ன என்று பார்த்தால் லொகேஷனும், யூனிட் மட்டும்தான். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top