இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
அவுஸ்திரேலிய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது அந்த அணியின் தொடக்க வீரர் வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்கு எதிராக வார்னர் களத்தடுப்பு செய்யவில்லை.
இன்றைய பயிற்சியின் போது சிடில் வீசிய பவுன்சர் பந்து வார்னர் தலையை நோக்கி வந்தது. இதில் இருந்து தப்பிக்க முழங்கையை மேலேதூக்கி பந்தை தடுத்தார்.
இதில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் வலைப் பயிற்சியில் இருந்து வெளியேறினார். இதனால், மெல்போர்ன் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் விளையாடுவாரா?, சிட்னியில் நடைபெறும் 4வது டெஸ்டில் இடம்பெறுவாரா? என்ற தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே, பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வார்னர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது பீட்டர் சிடில் வீசிய பந்து இடது கை பெருவிரலை பதம் பார்த்தது. போட்டி நடைபெற இரண்டு நாட்கள் இருந்ததால் காயத்தை சரிபடுத்தி விளையாடினார்.
இதேபோல் வாட்சன், ஷான் மார்ஸ், ஸ்டார்க் ஆகியோரும் வலைப் பயிற்சியில் காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியான வீரர்களை துரத்தும் காயத்தால் அவுஸ்திரேலிய அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.
0 comments:
Post a Comment