↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழிப் படமாக இருந்தாலும் அப்படத்துக்கு புரமோட் செய்வதற்கென்று பிரத்யேக நிகழ்ச்சி நடத்துவது அவசியமாகிவிட்டது. ‘லிங்கா‘ படத்துக்காக சென்னை, ஐதராபாத்தில் நடந்த விழாக்களில் கலந்துகொண்ட சோனாக்ஷி சின்ஹா மீண்டும் ‘தேவர்‘ புதிய இந்தி பட புரமோஷனுக்காக சமீபத்தில் ஐதராபாத் வந்தார். இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஒக்கடு' (தமிழில் கில்லி) படத்தின் ரீமேக். கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சோனாக்ஷியை கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். அவரை நடனம் ஆடச் சொல்லி கேட்டனர்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.இதுபற்றி சோனாக்ஷி கூறும்போது,‘கல்லூரியில் இந்த விழா நடப்பதை காணும்போது நான் கல்லூரியில் படித்த நாட்கள் ஞாபகத்துக்கு வருகிறது. மாணவர்கள் முன் நடனம் ஆடுவது படப்பிடிப்பு தளத்தில் நடிப்பதைவிட ரொம்பவும் ஜாலியானது. கல்லூரியில் படிக்கும்போது மேடையில் நடனம் ஆடுவது, பாடுவது என சுறுசுறுப்பாக இருப்பேன். லிங்கா படத்தின் புரமோஷனுக்காக ஏற்கனவே நான் ஐதராபாத் வந்திருக்கிறேன். இது இரண்டாவது விசிட். இந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment