↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மோதல் காரணமாக ராணாவை பிரிந்தார் திரிஷா. கன்னட நடிகை ராகினி திவேதியுடன் நெருக்கமாக ராணா பழகியதாலேயே இந்த மோதல் என்று கூறப்படுகிறது. திரிஷாவுடன் உறவை புதுப்பிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அந்த சோகத்தை மறக்க பிபாஷா பாசு உள்ளிட்ட வேறு நடிகைகளுடன் நெருக்கமாக பழக தொடங்கினார் ராணா.
திரிஷாவை தன்பக்கம் இழுக்க ராணா மேற்கொண்ட முயற்சிகள் எதிர்மறையாகவே முடிந்ததால் கடுப்பானார். அந்த வெறுப்பில் ஆபாச நடிகை சன்னி லியோனுடன் ‘ஒன் நைட் ஸ்டண்ட்‘ பாலிவுட் படத்தில் நடிக்க ராணா சம்மதித்திருந்தார். இந்த தகவல் பரவியதும் அவருடன் நட்பாக பழகிவரும் நடிகைகள் பின்வாங்கத் தொடங்கினர்.
ஏற்கனவே காதலை இழந்த ராணா மற்ற நடிகைகளின் நட்பையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஆழ்ந்தார். சன்னி லியோன் படத்திலிருந்து விலக முடிவு செய்தார். தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடிப்பதால் சன்னி லியோன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாது என்று அப்பட குழுவிடம் தெரிவித்துவிட்டு படத்திலிருந்து ஒதுங்கினார். டோலிவுட்டில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அந்த இந்தி படத்தில் அவருக்கு பதிலாக ரதி அக்னி ஹோத்ரியின் மகன் தனுஜ் விர்மானி நடிக்க உள்ளாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment