↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆமீர் கான் நடித்துள்ள பி.கே. படத்தில் இந்து கடவுள்களை கிண்டல் செய்துள்ளதாகக் கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என பஞ்சாப்பில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான் வித்தியாசமாக நடித்துள்ள பி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.95 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இந்து கடவுள்களை கிண்டல் செய்துள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் பி.கே. படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சிவசேனா கட்சியினர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போராட்டம் நடத்தினர். 

பி.கே. படத்தில் இந்து-முஸ்லிம் பிரிவினை, மதமாற்றம் மற்றும் பணக்கார சாமியார்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.கே. படம் இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்துவதாக உள்ளது என்று கூறி அதற்கு தடை விதிக்கக் கோரி லக்னோவைச் சேர்ந்த நீதிக்கான இந்து முன்னணி என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top