↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந்தேதி மாயமாகி விட்டார். அப்போது நடந்த ஜப்பான் விமான விபத்தில் அவர் பலியாகி விட்டதாக கூறப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தன்னிடம் உள்ள ரகசிய கோப்புகளை வெளியிட நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து விட்டது.இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமாரை சுபாஷ் சந்திரபோஸ் குடும்ப உறவினர்களான சித்ரா கோஷ், டாக்டர் டி.என். போஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், நேதாஜியின் மர்ம மரணம் பற்றிய ரகசிய கோப்பினை வெளியிட வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ். தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி ஒருவரது தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நேதாஜி மாயமானதின் மர்மம் குறித்து நீதி விசாரணை நடத்த உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Home
»
news
»
news.india
»
rss
» நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உதவியை குடும்பம் நாடுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment