நயன்தாரா முதல் முறையாக நடிக்கும் திகில் படம் ‘நைட்ஷோ’. அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ‘நெடுஞ்சாலை’ ஆரி நாயகனாக நடிக்கிறார். இருந்தாலும் இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிலையில் ‘நைட்ஷோ’ என்ற தலைப்பு ஆபாச பட தலைப்பு போல இருப்பதாக பல திசைகளிலிருந்தும் குரல்கள் எழுந்தன. இது நயன்தாராவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தலைப்பு வைத்தால் பெண் ரசிகைகள் படம் பார்க்க வரமாட்டார்கள் என நயன்தாராவிடம் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதையடுத்து படத்தின் தலைப்பை மாற்றும்படி நயன்தாரா டைரக்டருக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார். இதையடுத்து இயக்குனர் உடனடியாக பெயரை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் மாயா. அதனால் அதே பெயரை படத்திற்கு வைத்துவிடலாம் என்று வைத்திருக்கிறார்கள். அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயரும் மாயா தான், அந்த படம் ஹிட்டான சென்டிமெண்டை வைத்து அதே பெயரை இந்த படத்தில் பயன்படுத்தலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment