↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கமல்ஹாசனுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன பந்தமோ தெரியவில்லை…

பல வருடங்களுக்கு முன் கமல் அமெரிக்கா சென்றபோது ஒரு சம்பவம் நடைபெற்றதாக சொல்வார்கள்.

கமல்ஹாசன் என்ற அவரது பெயரை, கமால் ஹசன் என்று தவறாகப் புரிந்துகொண்டு அவரை முஸ்லீம் என நினைத்து ஏர்போர்ட்டில் மடக்கிவிட்டனராம்.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகே அவரை விடுவித்தனர் அமெரிக்க போலீஸ் அதிகாரிகள்.

தன்னை அவமாரியாதை செய்தாலும் கமலுக்கு அமெரிக்கா மீது அலாதியான பற்று உண்டு.

அந்த பற்றுதான் அவரை விஸ்வரூபம் என்ற பெயரில் அமெரிக்காவுக்கான விளம்பரப்படத்தை எடுக்க வைத்தது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ‘உத்தம வில்லன்’.

தற்போது இப் படத்தின் FINAL MIX பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

உத்தமவில்லன் படத்தின் இயக்குநர் நடிகர் ரமேஷ்அரவிந்த் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரிஜினல் டைரக்டர் அதாவது கமல்தான் இந்த வேலைகளை மேற்பார்வையிட்டு கவனித்து வருகிறார்.

இதில் பிஸியாக இருப்பதால்தான் தன் குருநாதர் கே.பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட கமல்ஹாசன் வரவில்லை.

இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் கமல்.

கமல்ஹாசனின் அமெரிக்க மோகத்துக்கு காரணம் என்ன?

ஆராய வேண்டிய விஷயம் இது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top