விக்ரமின் அடுத்த படத்தையும் விஜய் மில்டனே இயக்குவார் என செய்திகள் கூறுகின்றன. "10 எண்றதுக்குள்ள" படத்தின் கதையை கூறும்போதே விக்ரமிடம் தான் இன்னொரு கதையை கூறியதாகவும், இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து உடனே அடுத்த படத்தையும் ஆரம்பிக்கலாம் என விக்ரம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அனேகமாக அடுத்த படமும் விக்ரமுடன் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் விஜய் மில்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோலி சோடா என்ற சிறிய பட்ஜெட் படத்தை மாபெரும் ஹிட் படமாக்கியதன் காரணமாக விஜய் மில்டன் தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவரின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா மற்றும் பலர் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை சுமார் 40 கோடி ரூபாயில் தயாரித்து வருகிறது.
0 comments:
Post a Comment