ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.
1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
0 comments:
Post a Comment