சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். |
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். மிக விரைவில் விசாரணை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து, ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான குமார், ஒரு பேட்டியில் கூறுகையில், அடுத்ததாக இந்த வழக்கை விசாரிக்க கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் ஒன்றை அமைக்கும். ஜனவரி 12ம் திகதி முதல் வழக்கு விசாரணை தொடங்கலாம். உச்சநீதிமன்ற கோர்ட் உத்தரவுப்படி, விசாரணை தினமும் நடக்கும். வரும் ஏப்ரல் மாதத்தில் விசாரணை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். |
ஏப்ரல் மாதத்தில் நிறைவுக்கு வரும் ஜெயலலிதாவின் வழக்கு!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment