↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை அளிக்கும் குடை மிளகாயை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.
இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது.
குடை மிளகாயின் மகத்துவங்கள்
குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடை மிளகாய் காக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணத்தை விரட்டலாம்.
குடை மிளகாய் சட்னி
முதலில் குடை மிளகாயை, விதை நீக்கி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.
பருப்பு சிவந்தவுடன் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அதில் குடை மிளகாய் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு புளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி ஆற விடவும். இறுதியில் அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டினால் குடை மிளகாய் சட்னி ரெடி.
பயன்கள்
நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து.
இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.
குடை மிளகாய் கூட்டு
முதலில் குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பிறகு பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் அதில் குடை மிளகாயை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
அதில் வேகவைத்த பருப்பை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கினால் குடை மிளகாய் கூட்டு ரெடி.
பயன்கள்
இதை அவ்வப்போது சாப்பிடுவது உடலில் உள்ள சூட்டை தணிக்கும், உடல் சோர்வை போக்கும்.
கர்ப்பிணிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top