↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா-நயன்தாரா இருவரும் தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படத்தில் நயன்தாரா, அஜித்துக்குத் தான் ஜோடியாக நடித்திருந்தார்.
அதையடுத்து, ராஜா ராணியில் ஆர்யா-நயன்தாரா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதையடுத்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமான, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் நயன்தாராவையே நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம், ஆர்யா.
ஆனால் தற்போது நயன்தாரா கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் இருப்பதால் இப்போது கால்சீட் தருவது சாத்தியமில்லை என்று தட்டிக்கழித்து விட்டாராம். அதனால், வேறு வழியில்லாமல் ஆர்யா, தமன்னா பக்கம் சாய்ந்துள்ளார்.
இருப்பினும் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், மதராசப் பட்டினம் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் ஆர்யா, நயன்தாராவுடன் டூயட் பாடியே தீருவது என்ற முடிவில் இருக்கிறாராம்.
இதனால் தொடர்ந்து நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால், நயன்தாரா இப்போதும் அதே கால்சீட் பிரச்சினையை தான் முன் வைத்திருக்கிறாராம்.
Home
»
arya
»
cinema
»
cinema.tamil
»
nayanthara
» நயன்தாராவுடன் டூயட் பாடியே தீருவேன் - அடம் பிடித்த நடிகர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment