தமிழ் சினிமாவில் தாலியின் மகிமையை பற்றி பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இதில் பட்டம் பெற்றவர் என்றால் மணிரத்னம் தான்.
தற்போது தமிழகத்தில் தாலி அறுப்பு போராட்டம் போன்ற சர்ச்சை நடந்து வரும் நேரத்தில் தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பற்றிய கதையை ’ஓ காதல் கண்மணி’ படத்தில் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.
இதை வைத்து தாலியை பற்றி மணிரத்னம் பல காலமாக சொல்லி வருகிறார் என்று Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் ஒரு தகவல் டிரெண்டாகி வருகிறது.
“ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தால் - ஓகே கண்மணி
ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா”
0 comments:
Post a Comment