இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் சாலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்து காப்பாற்றினர்
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சுப்பிரமணீயன் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் பொன்னன் முகுந்த் குமார் எனவும் தெரிய வந்து உள்ளது குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, ‘உத்வேக மக்கள் விருது’ வழங்கி கவுரவிக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment