கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெகு பிரமாண்டமாக ரிலீஸ் ஆன ''பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7' திரைப்படம் வசூலில் பல சாதனைகளை உடைத்து புதிய சாதனையை ஏற்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பால்வாக்கரின் கடைசி படம், இந்த சீரீஸின் கடைசி படம் என கூறப்பட்டதால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில் ''பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8' படம் தயாரிக்கப்படுவது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று லாஸ் வேகாஸ் நகரில் சினிமாகான் 2015" என்ற விழாவில் கலந்து கொண்ட ''பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' நடிகர் வின் டீசல், அங்கு கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் உரையாடினார். அப்போது ''பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8வது பாகம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீசாகும் என்று ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எட்டாம் பாகத்தில் பால் வாக்கர் கேரக்டர் கிராபிக்ஸில் இருப்பாரா? அல்லது அவரது கேரக்டர் இல்லாமலேயே தயாரிக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு வின் டீசல் பதில் சொல்ல மறுத்துவிட்டார். 8ஆம் பாகம் வெளியாக இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றாலும் இந்த படம் குறித்த செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை.
0 comments:
Post a Comment