சின்ன குஷ்பு என்றழைப்படும் ஹன்சிகா தற்போது கைநிறைய படங்களுடன் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹன்சிகாவின் பார்வையில் அழகு என்றால் என்ன தெரியுமா? அழகாக இருப்பது என்பது ஒரு கலை, அதில் நான் தேர்ந்தவளாக இருப்பது பெருமை,” என்று கூறியுள்ளார்.
அதோடு ரசிகர்கள் என்னுடைய அழகான தோற்றத்தையும், சுறுசுறுப்பான ஆக்டிங்கையும்தான் பார்க்க விரும்புகிறார்கள். அழு முஞ்சி ஹன்சிகாவை பார்க்க யாரும் விரும்பவில்லை. என்னுடைய ரசிகர்களுக்காக தான் என்னை அழகாக காட்டி கொள்ள விரும்புகிறேன்.
என் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைதான் நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை பாராட்டும் போது அப்படியே வானத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறேன் என்று புன்னகையுடன் கூறியுள்ளார் ஹன்சிகா.
0 comments:
Post a Comment