காஞ்சனா 2 ன் கலெக்ஷன் எப்படி? ஒரு வரியில் சொல்வதென்றால், சும்மா பிரிச்சு மேஞ்சுருச்சு! தியேட்டர்களில் டிக்கெட் இல்லேன்னாலும் பரவாயில்ல. நின்னுகிட்டு பார்க்கிறோம் என்கிறார்களாம் ரசிகர்கள். சொன்ன மாதிரியே பல தியேட்டர்களில் நின்று கொண்டே பார்ப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கே கூட சவால் விடுகிற அளவுக்கு கலெக்ஷன் என்கிறார்கள். இதற்கிடையில் படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், மீண்டும் லாரன்சுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறதாம். முனி பார்ட் 4 ம் நீங்களே தயாரிங்க. நாங்க ஃபண்ட் தர்றோம் என்கிறார்களாம்.
இந்த நேரத்தில்தான் அய்யோ போச்சே ஆகியிருக்கிறார் அஞ்சலி. எதற்காக? இந்த படத்தில் நித்யா மேனனுக்கு ஒரு வலுவான கேரக்டர். ஆனால் படம் முழுக்க பலமில்லாதவராக வருகிறார். படத்தில் அவருக்கு ஒரு கால் மட்டும் ஊனம். அந்த கேரக்டரை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கும் அவர், பல இடங்களில் கண் கலங்கவும் வைக்கிறார். இவ்வளவு வெயிட்டான ரோலில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் அஞ்சலிதானாம். என்ன? நான் போய் ஊனமுற்றவளா நடிக்கிறதா? என் ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்க என்று மறுத்துவிட்டார் அஞ்சலி.
இப்போது தியேட்டர்களில் நித்யா மேனன் வருகிற காட்சிகளுக்கெல்லாம் விழுகிற கைதட்டல்களை பற்றி கேள்விப்பட்டு ‘நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேனே’ என்கிறாராம். போன பிறகு புலம்பறதே வேலையா போச்சு அஞ்சலிக்கு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.