↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. ஆனாலும் இளம் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் ராணி 
வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சி போன்றவற்றை கற்றுள்ளார். அஜீத் ஜோடியாக நடிக்கும் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருகிறது. 

அனுஷ்காவின் வசீகர அழகுக்கு அவர் சாப்பிடும் உணவு வகைகள் என்னென்ன என்ற ரகசியம் கசிந்துள்ளது. அதன் விவரம். தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்கிறார். தியான பயிற்சியிலும் ஈடுபடுகிறார். அதன் பிறகு ஒரு கப் பச்சை தேயிலை அருந்துகிறார். தொடர்ந்து முளை கட்டிய தானியங்களை சாப்பிடுகிறார். அதன் பிறகு காலை சிற்றுண்டியாக இட்லி, தோசை குறைவான அளவு சாப்பிடுகிறார். 

மதிய உணவுக்கு முன் பழச்சாறு அருந்துகிறார். மதிய உணவாக காய்கறி சாலட் சாப்பிடுகிறார். சிறிது நேரம் கழித்து உலர்ந்த பழங்களை சாப்பிடுகிறார். அதன் பிறகு இரவு உணவாக கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காயுடன் ரொட்டி சாப்பிடுகிறார். உணவு வகைகளை சீராக எடுத்துக் கொள்வதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் அனுஷ்கா.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top