↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணணிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
ஏனெனில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட 'த இன்டர்வியு’ (The Interview) என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்த நிலையில், சோனி நிறுவனத்தின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதால் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்த செயலில் வடகொரியா ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவின் பெயரும் சேர்க்கப் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தேசிய பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும் என எச்சரித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி கிம் ஜாங் தரப்பில் இந்த மிரட்டலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top