இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களால் கடவுளாக போற்றப்படுபவர் டேவிட் பெக்காமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன்தான் புரூக்ளின் (15 வயது).
பெக்காமை போல் கால்பந்தில் நாட்டம் கொண்ட புரூக்ளின், தற்போது ஆர்சனல் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே அவர் ஹாலிவுட் சினிமா அரங்கின் இளம் நடிகை குளோ மோரிட்ஸ் (17 வயது) பார்வையில் மயங்கி விட்டார். காதல் பறவைகளாக மாறிய இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சமூக வலைதளமான ‘டிவிட்டர்’ மூலம் புரூக்ளினிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு நச்சரித்துள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்த இவர் தனது ‘டிவிட்டர்’ கணக்கையே மூடிவிட்டார்.
ஆனால், மோரிட்ஸ் ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் வசமாக சிக்கிக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், எனக்கும், புரூக்ளினுக்கும் இடையில் நட்பையும் மீறிய உறவு உள்ளதா என பலர் கேட்கின்றனர்.
எனக்கு அதை சொல்ல தெரியவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர். அவருடன் இணைந்து பயணம் செய்யும் போது மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment