கடந்த 12-ம் திகதி வெளியான லிங்கா திரைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் பிரபலமாக உள்ள கார்ட்டூனிஸ்ட் ஒருவர் லிங்கா படத்திற்காக கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதை கேலி செய்து ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.
இதனால் கடுப்பாகிய ரஜினி ரசிகர்கள் மொத்தமாக ஃபேஸ்புக் இணையதள அட்மினுக்கு புகார் அனுப்பியதால் தற்போது அந்த கார்ட்டூனிஸ்ட் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கார்ட்டூனிஸ்ட் தனது பிளாகில் ரஜினி ரசிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment