↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தல படத்துடன் நேருக்கு நேர் மோதினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்ட போட்டி படத்தயாரிப்பாளர்கள் எப்படியாவது தல படத்தின் ரிலீஸை நிறுத்த சதியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதற்காக தல பட இயக்குனர் எடுத்த பழைய படம் ஒன்றில் பணியாற்றிய உதவி இயக்குனரை பலிகடாவாக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் அவரை வைத்து 'தல' படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு போட்டு தல படத்தின் ரிலீஸை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும், அதிகபட்சம் ஒருவாரம் தல படத்தில் ரிலீஸை வழக்கு போடுவதன் மூலம் தள்ளி போட்டுவிட்டாலே போதும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொய்வழக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவர் 6 அல்லது 7ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சதித்திட்டம் தெரிந்த தல படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் பட ரிலீஸை தடுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே படத்தை  ஆளுங்கட்சியில் செல்வாக்காக இருக்கும் ஒரு முக்கிய  வி.ஐ.பியிடம் இந்த படத்தின் உரிமையை விற்பனை செய்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளையும் அவர் பார்த்துக்கொள்வார் என்ற ரீதியில் தல படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

தல படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க கோலிவுட்டில் டென்ஷனும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top