↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த சில மாதத்துக்கு முன் நரம்பு நோய்பற்றிய விழிப்புணர்வுக்காக உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் சேலன்ஞ் நடந்தது. இதில் ஹன்சிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டம் அறிவித்து கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரை இதில் பங்கேற்க நியமனம் செய்தார். அவர்களும் அதை நிறைவேற்றினார்கள்.
தற்போது நடிகர், நடிகைகள் தங்களுக்கு தெரிந்த நட்சத்திரங்களை இந்த திட்டத்தில் பணியாற்ற நியமிக்கின்றனர். ஆனால்சமந்தா, தமன்னா போன்றவர்கள் தூய்மை திட்டத்தில் பங்கேற்றாலும் தங்களது சார்பில் யாரையும் முதலில் நியமிக்கவில்லை. பின்னர் சமந்தா, நடிகை திரிஷாவை பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சென்னையில் திரிஷா தனது சகாக்களுடன் சென்று குப்பையை சுத்தம் செய்துவிட்டு விஷால், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோரை இத்திட்டத்தில் பங்கேற்க நியமித்தார்.
திரிஷா, சமந்தா, தமன்னா மூவருமே டோலிவுட்டில்தான் நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் அங்குள்ள ஹீரோக்கள் யாரையுமே மூவரில் ஒருவர் கூட இத்திட்டத்தில் பங்கேற்க அழைக்கவில்லையாம். இந்த வருத்தம் டோலிவுட் ஸ்டார்கள் மனதில் மட்டுமல்ல ரசிகர்கள் மனதிலும் ஏற்பட்டிருக்கிறதாம். கோலிவுட் நடிகர்களை அழைத்த இவர்கள் டோலிவுட் நடிகர்களை புறக்கணித்தது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment