8 முன்னணி அணிகள் இடையிலான சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி திருவிழா ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. கடைசிகட்ட லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இந்தியாவும் பலம் வாய்ந்த நெதர்லாந்தும் மோதின. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது இந்தியா.
33வது நிமிடத்தில் இந்தியாவின் சுனில் முதல் கோல் அடித்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் நெதர்லாந்து கோல் அடித்து சமன் செய்தது.
கடைசி கால் மணி நேர ஆட்டத்தின் 47 மற்றும் 49வது நிமிடங்களில் இந்திய அணி அட்டகாசமாக ஆடி கோல்கள் அடித்தது.
58வது நிமிடத்தில் நெதர்லாந்து மீண்டும் கோலடித்தது. மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
மற்ற ஆட்டங்களில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது. இங்கிலாந்து பெல்ஜியம் இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. அவுஸ்திரேலியா 3-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது.
போட்டி விதிப்படி லீக் முடிவில் எந்த அணியும் வெளியேறாது. அனைத்து அணிகளும் காலிறுதி சுற்றில் விளையாட உள்ளன. இந்திய அணி காலிறுதியில் பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது.
0 comments:
Post a Comment