↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்த எம்ஜிஆர், சிவாஜிபோல் தெலுங்கு படவுலகை ஆட்டிப்படைத்தவர்கள் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ். இவர்கள் எல்லோருமே வர்த்தக ரீதியில் போட்டியிலிருந்தாலும் நட்பு மாறாமல் பழகிக்கொண்டனர். ராமராவ் வாரிசு பாலகிருஷ்ணாவும், நாகேஸ்வரராவ் வாரிசு நாகார்ஜுனாவும் ஒரு காலத்தில் நெருக்கமான நட்புடன் இருந்தவர்கள். இப்போது கீரியும், பாம்புமாக பிரிந்திருக்கிறார்கள்.
இதனால் இரண்டு குடும்பத்தினரும் பழகிக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விரோதம் சமீபத்தில் நடந்த விழா ஒன்றிலும் எதிரொலித்தது. பாலகிருஷ்ணாவும், நாகார்ஜுனாவும் ஒரே மேடையில் நின்றபோதும் ஒருவர்பக்கம் ஒருவர் திரும்புவதையோ, அருகருகே நிற்பதையோ தவிர்த்துவிட்டனர். சில வாரங்களுக்கு முன் நாகார்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் ஒப்புக்கொண்டிருந்தார். திடீரென்று அப்படத்திலிருந்து விலகிவிட்டார். பாலகிருஷ்ணா மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகவே ஜூனியர் என்டிஆர் நாகார்ஜுனா படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கவிருந்த வேடத்தில் இப்போது சூர்யா தம்பி கார்த்தி நடிக்க உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment