↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் சுருதிஹாசன். இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–
கோழைத்தனம் ஆபத்தானது. நம் வளர்ச்சியை அது தடுத்துவிடும். எனவே எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும்.
டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும் செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
நான் பார்த்த வரையில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறது என்பேன். அங்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே அந்த நகரம் எப்போதும் எனக்கு பிடிக்கும்.
எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு. ஆண்கள் மேல் எரிந்து விழ மாட்டேன். யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன். ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால் அவர்களை சும்மா விட மாட்டேன். நான் யார் என்று காட்டுவேன். கோழையாக இருந்தால் நம்பை குட்டிக் கொண்டே இருப்பார்கள். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். எந்த விஷயத்துக்கும் நான் பயந்தது கிடையாது. இந்த குணம் என் அம்மா சரிகாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர் பயந்து நான் பார்த்தது இல்லை. அம்மா மாதிரிதான் நானும் இருக்கிறேன்.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment