இந்திய அணி கடந்த 2009ம் ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன் முதல் டி20 போட்டி பெப்ரவரி, 25ல் கிறிஸ்ட்சர்சில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து, இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக ஷேவாக், கம்பீர் களமிறங்கினர்.
ஹாட்ரிக் சிக்சர்
முதல் ஓவரை நியூசிலாந்து அணியின் சவுத்தி வீச கம்பீர் முதல் 2 பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காமல், 3வது பந்தில் 1 ஓட்டம் எடுத்தார். இதன் காரணமாக மறுமுனையில் இருந்த ஷேவாக் 4வது பந்தை எதிர்கொண்டார்.
பவுன்சராக வந்த பந்தை சற்று விலகி லெக் திசையில் விளாச அது சிக்சராக சென்றது. முதல் பந்து தெரியாமல் சிக்சராக சென்று விட்டதாக நினைத்த சவுத்தி, 5வது பந்தை ஷேவாக்கை குறிவைத்து 40கி.மி வேகத்தில் வீசினார். அதை மீண்டும் சிக்சருக்கு விரட்டினார் ஷேவாக்.
இதனால் மைதானத்தில் இருந்த நியூசிலாந்து ரசிகர்கள் வாயடைத்து போயினர். பின்னர் கடைசி பந்தையும் விட்டு வைக்காத ஷேவாக் பிளாட் ஆக ஒரு சிக்சர் என முதல் ஓவரிலே `ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவரிலே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் இந்திய அணியில் மிரட்டல் ஆட்டக்காரராக விளங்கிய ஷேவாக்கை இந்திய அணி கழற்றிவிட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண இந்திய அணியிலும் சேர்த்துக் கொள்ளப்படாதது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment