ஏன் இப்படி?
சன்னி லியோனை சந்திக்காமல் அவரது அனுமதி பெறாமல் தயாரிப்பாளர்களே, எங்கள் படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என்று செய்தி தருகிறார்களாம். சமீபத்தில் அப்படி வெளியான செய்தி மீடியாவில் புகையை கிளப்ப சன்னி லியோன் கடுப்பாகிவிட்டார்.
தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்ட நடிகை மம்தா குல்கர்னியின் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என ஒரு தயாரிப்பாளர் பிரஸ்ஸுக்கு தகவல் சொல்ல, செய்தி மீடியாவில் பிளாஷானது. இது சன்னி லியோனின் காதுகளை எட்ட, என்னுடைய அனுமதியில்லாமல் ஏன் இப்படி தகவல் தருகிறார்கள் என்று நொந்து கொண்டார்.
0 comments:
Post a Comment