இதுகுறித்து அவர் மேலும் கூறியது: ரஜினிகாந்த் ஆதரவுடன் ரஜினி ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வந்தாலும், இந்த தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் ரஜினியின் ஆதரவு, நிதியுதவிகளின்றி அவர் மேல் உள்ள அன்பு காரணமாக தொடங்கப்பட்டது. இதன்மூலம் ரஜினி திரைப்படம் வெளியாகும் நாளில் பல்வேறு வகைகளில் கொண்டாடுவதுடன், பொதுமக்களுக்கு மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளையும் செய்து வருகிறோம்.
இந்தநிலையில், இந்த தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிட சங்கத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளோம். கட்சி ஆரம்பிப்பது குறித்து, தேர்தல் ஆணைய த்துக்கு முறைப்படியான அனைத்து சான்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தமாட்டோம். இந்த அரசியல் கட்சி தொடங்க வேண்டியதற்கான காரணம் வெள்ளிக்கிழமை நடக்க உள்ள கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
அரசியல் கட்சி தொடங்குவதை அடுóத்து தொழிற்சங்கம் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த நிரந்த கண்காட்சியை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில், சில முறை ரசிகர்களே ரஜினிக்காக கட்சி ஆரம்பித்ததும், தொடர்ந்து அவர்கள் ரஜினி மன்றத்திலிருந்து விலக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. இந்தநிலையில், ரஜினி மன்றத்தைச் சாராத அவரது ரசிகர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதும், இந்த கட்சிக்கு ரஜினியின் படத்தை பயன்படுத்த மாட்டோம் என அறிவித்திருப்பதும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
0 comments:
Post a Comment