↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டோலிவுட் நடிகர் மகேஷ்பாபுவின் ‘ஆகடு‘ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். 4 நிமிடம் மட்டுமே இடம்பெற்ற இப்பாடலில் ஆடுவதற்காக ஸ்ருதிக்கு ரூ.40 லட்சம் தரப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு ஆட்டத்துக்கு ஜோடி போட்ட ஸ்ருதி தற்போது புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடந்தது.
மகேஷ்பாபு, ஸ்ருதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அப்படத்திலிருந்து ஸ்ருதி விலகிவிட்டதாக பேச்சு எழுந்தது. இது பற்றி அறிந்த ஸ்ருதி தனது மேனேஜர் மூலம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘மகேஷ்பாபு படத்திலிருந்து ஸ்ருதி விலகவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. அதில் ஸ்ருதி பங்கேற்கிறார்‘ என்றார் ஸ்ருதி மேனேஜர்.
இயக்குனர் சிவா கூறும்போது, ‘ஸ்ருதி இப்படத்தில் நடிக்கவில்லை என்று வதந்தி பரவி உள்ளது. அது தவறு. அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார். இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ரசிகர்களையும், மீடியாக்களையும் கேட்டுக்கொள்கிறேன்‘ என கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment