இந்தியா - அவுஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸை அவுஸ்திரேலிய அணி முடிக்க, இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
இந்தியா 53 ஓட்டங்கள் குவித்த நிலையில் முரளிவிஜய் மிட்சல் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விராட் கோஹ்லி களமிறங்கினார்.
விராட் கோஹ்லி சந்தித்த முதல் பந்தை மிட்சல் ஜான்சன் பவுன்சராக வீசினார். அதை தவிர்க்க முயன்றும், ஹெல்மெட்டில் அடி வாங்கினார் கோஹ்லி.
அதிர்ச்சியில் உறைந்த கோஹ்லி சிறிது நேரத்தில் நிதானித்தார். ஆனால் அடுத்த நொடியே சுற்றியிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கோஹ்லி அருகே பதறியடித்து வந்து அவரிடம் நலம் விசாரித்தனர்.
இதனால் மிட்சல் ஜான்சன் சற்று பதற்றமடைய, அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தட்டிக் கொடுத்து பதற்றமடைய வேண்டாம் என ஆறுதல் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன் அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் பந்து தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சோக சம்பவத்தில் இருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் மெதுவாக மீண்டு வரும் வேளையில் இந்த நிகழ்வு அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
எதிரணி வீரர்களை தூண்டி விட்டு களத்தில் மோசமான சந்திக்க வைக்கும் முயற்சிக்கு பெயர் போன அவுஸ்திரேலிய அணியின் மனப்பான்மை, பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்கு பிறகு மாறி இருப்பது இந்த சம்பவத்தில் இருந்தே நன்றாக தெரிகிறது.
0 comments:
Post a Comment