சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில், சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் காயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுக்ஸ், சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 27ம் திகதி மரணமடைந்தார்.
இவரின் உடல் கடந்த 3ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகத்தில் அணித்தலைவர் கிளார்க் உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், வரும் 9ம் திகதி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது.
சோகத்திலிருந்து மீண்டு கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், பிலிப் ஹியுக்ஸின் மரணத்திற்கு பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. சோகத்திலிருந்து மீண்டு இம்மாதிரியான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என எந்தவொரு வீரருக்கும் தெரியாது.
இதனால் எங்கள் அணி வீரர்கள் மிகப்பெரிய மனப்போராட்டத்தை எதிர் கொள்ள உள்ளனர். இருப்பினும், இதிலிருந்து விடுபட்டு சிறப்பாக செயல்படுவர் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment