இதுகுறித்து அவர் கூறியதாவது, இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் ஆடும் 11 வீரர்களில் இடம்பெறவில்லை.
உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்து, ஓட்டங்களை அடித்திருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்கள்.
ஆனால், கிரிக்கெட் இப்போது வேகம், விரைவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அணிகள் பாசஞ்சரை நம்பமுடியாதல்லவா?
வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும், அங்கு அனுபவம் பெருமதிப்புடையதாக இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் (5 வீரர்கள்) ஃபார்மில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
30 வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவர்கள் இப்போதுள்ள ஃபார்மின்மையை சுட்டுவதாகும்.
இது பழக்கமில்லாததுதான், ஆனால் இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பு. இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதற்காக அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது என்று கூறுவதற்கில்லை.
ஏனெனில் கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, முடிந்து விட்டது என்று நினைப்போம் ஆனால் அவர்கள் டன் கணக்கில் ஓட்டங்கள் அடித்து மீண்டும் தங்களைத் தெரிவு செய்ய வலியுறுத்தலாம், யார் கணிக்க முடியும்? என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment