↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஜோடியாக சார்மி அறிமுகமானார். ஆஹா எத்தனை அழகு, லாடம் படங்களிலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். இலியானாவும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இருவருக்கும் பட வாய்ப்புகள் பிடிப்பதில் பனிப்போர் நடக்கிறது என்று தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இலியானாவை சார்மி கேலி செய்துள்ளார்.

தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் சார்மியிடம் நீங்கள் இதுவரை எந்த நடிகையை மேக்கப் இல்லாமல் பார்த்தது இல்லை என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சார்மி நான் இலியானாவை மேக்கப் போடாமல் பார்த்தது இல்லை. அப்படி யாராவது மேக்கப் இல்லாமல் அவரை பார்த்தால் உடனே அவரிடம் மேக்கப் பாக்சை எடுத்து கொடுத்து மேக்கப் போட்டு விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்லி விடுவார்கள் என்றார்.

மேக்கப் போடாமல் இலியானா அழகாக இருக்க மாட்டார் என்று சொன்னதற்காக அவர் மேல் இலியானா கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top