↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஹரியானாவின் மற்றொரு சர்ச்சை சாமியாரான தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ரகீம் சிங் தமது சீடர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கும் ஆண்மையை அகற்றியதற்கு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹரியானாவின் தேரா சச்சா சவுதா என்பது சீக்கிய ஆன்மீக அமைப்புகளில் ஒன்று. ஆனால் அகாலி தத் உள்ளிட்ட அனைத்து சீக்கிய அமைப்புகளும் இந்த தேரா சச்சா சவுதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தேரா சச்சா பாபா குர்மீத் ரகீம் சிங்கின் முன்னாள் சீடர் ஒருவர் ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், தான் உட்பட 400க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயமாக குர்மீத் ரகீம் சிங் ஆண்மையை அகற்றியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வழக்கில் விளக்கம் அளித்திருந்த குர்மீத் ரகீம் சிங், சீடர்களுக்கு மட்டுமல்ல தாமும் கூட ஆண்மையை அகற்றியிருக்கிறேன் என்றெல்லாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஹரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம், குர்மீத் ரகீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐயும் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் குர்மீத் ரகீம் சிங் ஏன் தமது சீடர்களுக்கு கட்டாயமாக ஆண்மையை அகற்றினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. குர்மீத் ரகீம் சிங்கிடம் ஆண்களைப் போல நூற்றுக்கணக்கான பெண்களும் "சாத்வி"கள் என சீடர்களாக இணைந்துள்ளனர். இந்த சாத்விகளை ஆண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே ஆண்மையை குர்மீத் ரகீம் சிங் அகற்றினார் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Home
»
news
»
news.india
» தேரா சச்சா சவ்தாவின் 'பாபா' 400 சீடர்களுக்கு ஆண்மையை அகற்றியது ஏன் தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment