↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு 'டிரென்ட்' வந்து கொண்டேயிருக்கும், போய்க் கொண்டேயிருக்கும். அந்த 'டிரென்ட்' கொஞ்ச காலத்திற்கு இருக்கும், பின்னர் வேறு ஒரு 'டிரென்ட்' வந்து பழைய 'டிரென்ட்'டை அடித்து காலி செய்து விடும். எப்போது, எப்படி, எதனால், ஏன், எதற்காக ரசிகர்களின் ரசனைகள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
சென்டிமென்ட், காதல், ஆக்ஷன், காமெடி, என்ற 'டிரென்ட்' மாறி 2014ல் 'பேய், பிசாசு' டிரென்ட் உருவானது. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்துள்ள 200 படங்களில் பல பேய்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
கடந்த வாரம் வெளிவந்த மிஷ்கினின் 'பிசாசு' திரைப்படம் முதல் மூன்று நாட்களுக்குள்ளேயே சுமார் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட் சுமாராக எவ்வளவு இருக்கும் என்பது படத்தைப் பார்த்த பலருக்கும் தெரிந்திருக்கும். ஒரே ஒரு அபார்ட்மென்ட், கிளைமாக்சில் பின்னி மில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே அதிகம் எடுக்கப்பட்ட படம்.
மீடியாக்களின் விமர்சனங்களாலும், படம் பற்றிய சமூக வலைத்தள பாசிட்டிவ் கமெண்ட்டுகளாலும் படம் நேற்றும் நல்ல வசூலைத் தொடர்ந்தது என்கிறார்கள். அதிகம் பயமுறுத்தாத பிசாசு படத்தில் இருப்பதாலும், கொஞ்சம் நகைச்சுவையுடன் சுவாரசியமான படமாக இருப்பதாலும் இந்த ஆண்டில் வெளிவந்த கடைசி த்ரில்லர் படமான 'பிசாசு' படத்தின் வசூல் பிரமாதமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment