கோலிவுட், டோலிவுட் என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கைநிறைய படங்களுடன் பிஸியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது மார்க்கெட் சரிந்து கொண்டே வருகிறது.
அதனால் காஜலின் திருமணம் குறித்த வதந்திகளும் பரவ தொடங்கி விட்டது. இந்நிலையில் திருமணம் குறித்து காஜல் அகர்வால் கூறும் போது, தன்னைவிட மூத்த நடிகைகளான அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் திருமண செய்து கொண்ட பிறகு தான், தானும் திருமண பந்தத்தில் இணைவது குறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதுவரை படங்களில் நடிப்பதில்தான் கவனம் செலுத்துவேன். அதோடு என்னுடைய திருமணத்திற்கு ஒன்றும் அவசரம் இல்லை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment