↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த வெள்ளியன்று 'ஓகே கண்மணி' என்ற சூப்பர் ஹிட் காதல் திரைப்படத்தை கொடுத்த மணிரத்னம் அதே உற்சாகத்தோடு சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் மனம் திறந்து கமல், ரஜினி, மற்றும் தனது படங்கள் குறித்தும் பல விஷயங்களை கூறியுள்ளார்.
'இரண்டரை மணி நேர படத்திற்கு இரண்டே வார்த்தைகளில் உருவாகும் தலைப்புதான் முக்கியம். கண்மணி என்று செல்லமாக நாம் அனைவரையும் கூப்பிட முடியாது. ரொம்பவும் பிரியத்துக்கு உரியவங்களை மட்டும்தான் அப்படி கூப்பிட முடியும். அந்த ஸ்பெஷல் தகுதிக்காகவே அந்த வார்த்தையையே டைட்டிலா வைத்தோம்.
ரோஜா அரவிந்த்சாமி, அலைபாயுதே மாதவன் மாதிரி இந்த காலகட்ட இளைஞர்களின் சாம்பிள் பிம்பம்தான் துல்கார் சல்மான். துல்கார் சல்மான் காதல் காட்சிகளை உருவாக்க ரொம்பவே சிரமப்பட்டேன். ரொம்பப் பழைய ஸ்டைல்ல மத்த சினிமாக்கள் போல, ஹீரோ தன் காதலைச் சொன்னா, 'ச்சீ போ’னு அந்த ஹீரோயினே சொல்லிடுவார். அதனால காதலைச் சொல்லும்போது எல்லாமே ஸ்பெஷலா இருக்க வேண்டும் என கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலா யோசித்தோம். அது நன்றாக வந்ததால் ஆடியன்ஸ்களுக்கு பளிச்சென தெரிகிறது.
ரஜினிக்கும், கமலுக்கும் தனித்தனியா கதை அமைப்பதே பெரிய விஷயம். கமலுக்கு நாயகனைவிட ஒரு அழுத்தமான கதையையும், ரஜினிக்கு தளபதியை விட ஒரு அட்டகாசமான கதையை பிடிக்க வேண்டும் என்பதே ஒரு பெரிய சவால். இந்த நிலையில் இருவரையும் சேர்த்துவெச்சு எப்படி ஒரு படம் பண்றது? சத்தியமா சவால்தான் என்று கூறிய மணிரத்னம், இருப்பினும் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க சின்னச் சின்ன ஐடியாக்கள் மனதில் தோன்றியுள்ளது. ஆனா, யார்கிட்டயும் சொல்ற அளவுக்குக்கூட அது வளர்ச்சி அடையலை என்று கூறினார்.
Home
»
cinema
»
cinema.tamil
»
kamal
»
maniratnam
»
rajini
» ரஜினி-கமலை இணைத்து படமெடுப்பது பெரிய சவால். மணிரத்னம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment