↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றபோது பாகிஸ்தான் எப்படி செயல்பட்டதோ, இப்போதும் அப்படியே உள்ளது என்று கூறியுள்ளார், அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வேகப்பந்து ஜாம்பவானுமாகிய வக்கார் யூனிஸ் தெரிவித்தார். நடப்பு உலக கோப்பையில், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. வெஸ்ட் இண்டீசிடம் இன்னும் மோசமாக தோற்றது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுடன் அந்த அணி விளையாடிய விதம் பலரையும் கவர்ந்தது. அதிலும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அந்த போட்டியில் பட்டையை கிளப்பியது.
இதுகுறித்து பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், "1992லும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில்தான் உலக கோப்பை போட்டிகள் நடந்தன.
அப்போதும், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் தொடங்கி தொடர்ச்சியாக தோற்று வந்தது. ஆனால், அதன்பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பி உலக கோப்பையை வென்றது. அதே போன்ற எழுச்சியை இப்போதைய பாகிஸ்தான் அணியிடமும் பார்க்க முடிகிறது.
உலக கோப்பையை மீண்டும் வெல்வோமா என்பது பற்றி இப்போதே கூறுவது சரியாக இருக்காது. ஆனால், நாங்கள் சரியான வழியில் செல்ல தொடங்கியுள்ளோம்". இவ்வாறு வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.
1992லும் முதலில் பாகிஸ்தானுக்கு ஆப்பும், பிறகு சூப்பும் கிடைத்தது. அதுபோலவே இப்போதும் நடக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» பாகிஸ்தானுக்கு ஆப்புக்கு அப்புறம் சூப்பு! 1992 உலக கோப்பை வரலாறு திரும்புகிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment