↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாகிஸ்தானியரான முகமது பஷீர் இந்திய அணியின் கேப்டன் டோணியை தனக்கு பிடிக்கும் என்று கூறுவதால் அவரது சொந்த நாட்டு மக்களால் துரோகி என்று அழைக்கப்படுகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது பஷீர். அமரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார்.
அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடும் இடங்களுக்கு சென்று வீரர்களை ஊக்குவிப்பார். பாகிஸ்தானியராக இருந்தாலும் அவருக்கு இந்திய அணியும், அதன் கேப்டன் டோணியும் பிடிக்கும். பாகிஸ்தான் விளையாடாத நாட்களில் இந்திய அணியை ஊக்குவிப்பார். இந்திய அணியை ஊக்குவிப்பதாலும், டோணி என் ஹீரோ என்று அவர் கூறி வருவதாலும் அவர் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியின்போது பாகிஸ்தானிய ரசிகர்கள் என்னை திட்டினர். டோணி மீது நான் அன்பு வைத்துள்ளதால் என்னை துரோகி என்றும் அழைத்தனர்.
பாகிஸ்தானிய ரசிகர்கள் என்னை திட்டியது வருத்தம் அளிக்கிறது. இந்த போட்டியை காண நான் வந்திருக்கவே கூடாது என்று தோன்றுகிறது.
எனக்கு டோணியை மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த மனிதர். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நான் இந்தியாவில் இருந்தேன். இந்தியா-பாகிஸ்தான் மோதிய அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வாங்க கஷ்டப்பட்டேன்.
நான் டிக்கெட் கிடைக்காமல் கஷ்டப்பட்டதை அறிந்த ஒரு இந்திய பத்திரிக்கையாளர் என் நிலைமை பற்றி டோணியிடம் தெரிவித்தார். இதை கேட்ட டோணி நான் யார் என்று தெரியாமல், ஏன் என்னை சந்திக்காமலேயே, எதிரணி நாட்டைச் சேர்ந்த எனக்கு டிக்கெட் அனுப்பினார்.
அண்மையில் டோணி பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். எங்கள் மதத்தை பொறுத்த வரை பெண் குழந்தைகள் அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்கள், டோணிக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று பஷீர் தெரிவித்துள்ளார்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
» டோணி மீதான என் அன்பால் என் நாட்டவரே என்னை துரோகி என்கிறார்கள்: பாகிஸ்தானிய ரசிகர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment