நாளைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தான் அதிக கவனம் செலுத்தப் போவதாக அயர்லாந்து அணி கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நாளை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய 4 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்றுள்ளது அயர்லாந்து. அதே சமயம் இந்தியா தான் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய போட்டி பற்றி அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு கூறுகையில்,
நாளைய போட்டி பிற போட்டிகளை போன்றது தான். நாளைய போட்டி ஒன்றும் வித்தியாசமானது கிடையாது.
ஒவ்வொரு போட்டியையும் சிறப்பான முறையில் அணுகி வருகிறோம். தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் உள்ளோம்.
நாளைய போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம். உலகக் கோப்பை தொடரில் நாளையுடன் 5ல் 4 போட்டிகளில் வெற்ற பெற நினைக்கிறோம்.
விக்கெட் எடுப்பதன் மூலம் தான் எதிர் அணியை கட்டுப்படுத்த முடியும். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்புடன் தான் 50 ஓவர்களிலும் விளையாட உள்ளோம்.
பேட்டிங்கோ, பவுலிங்கோ முதல் 10 ஓவர்கள் தான் மிகவும் முக்கியம். அதனால் ஆட்டத்தை சிறப்பாக துவங்க உள்ளோம் என்றார் போர்டர்பீல்டு.
0 comments:
Post a Comment